சென்னை: வெங்காயம் விலை உயர்வு
வெள்ளி, 23 ஜனவரி 2009 (10:16 IST)
அயல் மாநிலங்களான நாசிக், புனேவில் விளைச்சல் குறைந்துள்ளதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம், சாம்பார் வெங்காயம் விலை உயர்ந்து காணப்படுகிறது. ஆனால் மற்ற காய்கறி விலைகள் குறைந்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விற்பனை மந்தமாக உள்ளது மட்டுமின்றி காய்கறிகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் அதன் விலைகள் குறைந்துள்ளது என்று சென்னை கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு மாறாக பழம், பூக்களின் விலைகள் உயர்ந்துள்ளது.
காய்கறி, பழங்கள், பூக்கள் விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
கோஸ் ரூ.08
கேரட் ரூ.10
பீட்ரூட் ரூ.08
சவ்சவ் ரூ.06
நூக்கோல் ரூ.06
முள்ளங்கி ரூ.04
வெள்ளரிக்காய் ரூ.05
பீன்ஸ் ரூ.10
கத்திரிக்காய் ரூ.08
அவரைக்காய் ரூ.10
புடலங்காய் ரூ.10
வெண்டைக்காய் ரூ.20
மிளகாய் ரூ.09
குடை மிளகாய் ரூ.10
முருங்கைகாய் ரூ.50
இஞ்சி ரூ.30
தேங்காய் (ஒன்று) ரூ.08
சேனைக் கிழங்கு ரூ.08
சேம்பு ரூ.10
உருளைக்கிழங்கு ரூ.08
கோவக்காய் ரூ.08
சுரக்காய் ரூ.08
நாட்டு தக்காளி ரூ.10
பெங்களூரு தக்காளி ரூ.10
பூசணி ரூ.10
நாசிக் வெங்காயம் ரூ.20
சாம்பார் வெங்காயம் ரூ.23
பட்டாணி ரூ.20
பாகற்காய் ரூ.15
காலிபிளவர் (ஒன்று) ரூ.08
பரங்கிகாய் ரூ.12
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஸ்ட்ராபெர்ரி ரூ.260
இந்தியன் ஆப்பிள் ரூ.75
வாஷிங்டன் ஆப்பிள் ரூ.85
நாவல் ஆரஞ்சு ரூ.75
இந்தியன் ஆரஞ்சு ரூ.45
சாத்துக்குடி ரூ.40
கொய்யா ரூ.25
கருப்பு திராட்சை ரூ.40
பச்சை திராட்சை ரூ.45
கணேஷ் மாதுளை ரூ.65
காபூல் மாதுளை ரூ.70
செவ்வாழைப்பழம் ரூ.20
கற்பூரவள்ளி ரூ.25
ரஸ்தாளி ரூ.20
பச்சை வாழைப்பழம் ரூ.15
பப்பாளி ரூ.10
சப்போட்டா ரூ.25
கிரினி பழம் ரூ.16
தர்பூசணி ரூ.14
நேந்திரம் பழம் ரூ.50
அத்திப்பழம் ரூ.15
மலவாழைப்பழம் ரூ.45
சீத்தா ரூ.20
ரூமேனியா ரூ.55
பூ வகைகள் (ஒரு கிலோ)
மல்லி ரூ.400
ஜாதி மல்லி ரூ.300
முல்லை ரூ.300
கனகாமரம் ரூ.600
சாம்பந்தி ரூ.80
சம்பங்கி ரூ.100
100 ரோஸ் ரூ.30
குயின் ரோஸ் ரூ.30
கோழி கொண்டை ரூ.80
வாடா மல்லி ரூ.80
செண்டு பூ ரூ.80
அரளி பூ ரூ.80