மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், படிப்படியாக குறைய துவங்கின. மதியம் சுமார் 2 மணியளவில் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட குறைந்தது. அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், வர்த்தகம் முடிவடையும் போது சிறிது அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 9 ஆயிரத்திற்கும் கீழ் நேற்று குறைந்தது. இன்றும் பழைய நிலையை எட்டவில்லை.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 34.67 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 8,813.84 ஆக அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 7.65 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2,713.80 ஆக உயர்ந்தது.
ஆனால் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 61.06, சுமால் கேப் 67.70, பி.எஸ்.இ 500- 14.00 புள்ளிகள் குறைந்தன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் நடந்த வர்த்தகத்தில் பார்தி ஏர்டெல் பங்கு விலை 6.19%, நேஷனல் அலுமினியம் 5.52 %, பவர் கிரிட் 4.75%, பஜாஜ் ஆட்டோ 4.12%, ஆர்கிள் பைனான்ஸ் 3.92%, பாந்த்லன் ரீடெய்ல் 3.24%, பாங்க் ஆப் இந்தியா 2.33%, ஐ.சி.ஐ.சி.ஐ பாங்க் 2.53%, சன் பார்மா 2.78%, ஏ.சி.சி லிட் 2.45%, கனரா வங்கி 2.31%, ஜி.எம்.ஆர் இன்ப்ராக்சர் 2.05%, கிரேசம் இன்டஸ்டிரிஸ் 3.05% அதிகரித்தன.
அதே நேரத்தில் யுனைடெட் ஸ்பிரிட் பங்கு விலை 22.91%, ஜு என்டர்பிரைசஸ் 11.09%, ரான்பாக்ஸி 8.89%, சன் டி.வி நெட் 6.36%, கோடக் பாங்க் 5.81%, நாகரிஜுனா கன்ஸ்ரக்சன் 6.01%, வோல்டாஸ் 6.09%, ரிலையன்ஸ் இன்ப்ரா 6.15%. ஹின்டால்கோ 7.49% குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 739 பங்குகளின் விலை அதிகரித்தது. 1661 பங்குகளின் விலை குறைந்தது. 96 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் உலோக உற்பத்தி பிரிவு குறியீட்டு எண் 2.50%, மின் உற்பத்தி பிரிவு 0.24%, ரியல் எஸ்டேட் பிரிவு 5.47%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 1.61%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 0.56%, வாகன உற்பத்தி பிரிவு 1.31% குறைந்தது.
ஆனால் வங்கி பிரிவு 0.74%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 0.39%, தொழில் நுட்ப பிரிவு 1.27%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.36% அதிகரித்தது.