பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் அதிகரித்தும் கூட, இன்று காலை 9 ஆயிரத்தை எட்டவில்லை.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று பதவி ஏற்றுள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதிலும், வேலை இல்லை திண்டாட்டத்தை குறைப்பதிலும் பாரக் ஒபாமா எடுக்கப் போகும் நடவடிக்கைகளை பொறுத்தே அமெரிக்க பங்குச் சந்தையின் போக்கு இருக்கும்.
இன்று ஆசிய நாடுகளில் சாதகமான நிலை நிலவியதால், இந்திய பங்குச் சந்தையும் ஏற்றத்தை கண்டது. கடந்த இரண்டு நாட்களாக சரிந்து வந்த பங்குச் சந்தையில், இன்று நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. ஆனால் இதே நிலை இறுதி வரை தொடருமா என்பது சந்தேகமே.
காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 112.21, நிஃப்டி 24.45 புள்ளிகள் அதிகரித்தன.
ஆசிய நாடுகளில் எல்லா பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை நிலவியது.
சீனாவின் சாங்காய் காம்போசிட் 2.67, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 23.31, ஜப்பானின் நிக்கி 55.64, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 13.41, ஹாங்காங்கின் ஹாங்செங் 215.12 புள்ளி அதிகரித்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 279.01, நாஸ்டாக் 66.21, எஸ் அண்ட் பி 500-35.02 புள்ளிகள் அதிகரித்தன.
ஐரோப்பிய நாடுகளிலும் நேற்று ஜெர்மனி தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளும் சரிவை கண்டன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-31.52 புள்ளிகள் குறைந்தது.
காலை 10.25 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 27.10 (NSE-nifty) புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 2733.25 ஆக அதிகரித்தது. இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 109.23 (BSE-sensex) புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 8,888.40 ஆக உயர்ந்தது.
மிட் கேப் 12.82, பி.எஸ்.இ. 500- 24.92, சுமால் கேப் 14.71 புள்ளிகள் அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.17 மணியளவில் 740 பங்குகளின் விலை அதிகரித்தும், 434 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 39 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.786.52, கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஆனால் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.282.73 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.