சென்னை: காய்கறி விலை சரிவு; வெங்காயம் விலை உயர்வு
புதன், 21 ஜனவரி 2009 (10:24 IST)
சென்னை : காய்கறி விளைச்சல் அதிகமாக இருப்பதால் அதன் விலைகள் குறைந்துள்ளது என்று சென்னை கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் வெங்காயம் விலை அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் காய்கறி விலைகள் கனிசமாக குறைந்துள்ளது.
கோஸ், கேரட், பீட்ரூட், சவ்சவ், கத்தரிக்காய், அவரைக்காய், மிளகாய், தக்காளி ஆகியவற்றின் விலைகள் குறைந்துள்ளது. ஆனால் பெரிய வெங்காயம், சாம்பார் வெங்காயம், வெண்டைக்காய் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.
வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்துள்ளதால் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
காய்கறி, பழங்கள், பூக்கள் விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
கோஸ் ரூ.08
கேரட் ரூ.13
பீட்ரூட் ரூ.10
சவ்சவ் ரூ.08
நூக்கோல் ரூ.08
முள்ளங்கி ரூ.08
வெள்ளரிக்காய் ரூ.07
பீன்ஸ் ரூ.13
கத்திரிக்காய் ரூ.08
அவரைக்காய் ரூ.13
புடலங்காய் ரூ.10
வெண்டைக்காய் ரூ.20
மிளகாய் ரூ.09
குடை மிளகாய் ரூ.15
முருங்கைகாய் ரூ.50
இஞ்சி ரூ.30
தேங்காய் (ஒன்று) ரூ.08
சேனைக் கிழங்கு ரூ.10
சேம்பு ரூ.12
உருளைக்கிழங்கு ரூ.10
கோவக்காய் ரூ.10
சுரக்காய் ரூ.10
நாட்டு தக்காளி ரூ.12
பெங்களூரு தக்காளி ரூ.12
பூசணி ரூ.10
நாசிக் வெங்காயம் ரூ.18
சாம்பார் வெங்காயம் ரூ.18
பட்டாணி ரூ.30
பாகற்காய் ரூ.20
காலிபிளவர் (ஒன்று) ரூ.12
பரங்கிகாய் ரூ.12
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஸ்ட்ராபெர்ரி ரூ.240
இந்தியன் ஆப்பிள் ரூ.70
வாஷிங்டன் ஆப்பிள் ரூ.80
நாவல் ஆரஞ்சு ரூ.70
இந்தியன் ஆரஞ்சு ரூ.40
சாத்துக்குடி ரூ.35
கொய்யா ரூ.20
கருப்பு திராட்சை ரூ.45
பச்சை திராட்சை ரூ.50
கணேஷ் மாதுளை ரூ.60
காபூல் மாதுளை ரூ.70
செவ்வாழைப்பழம் ரூ.15
கற்பூரவள்ளி ரூ.20
ரஸ்தாளி ரூ.20
பச்சை வாழைப்பழம் ரூ.15
பப்பாளி ரூ.09
சப்போட்டா ரூ.20
கிரினி பழம் ரூ.16
தர்பூசணி ரூ.14
நேந்திரம் பழம் ரூ.45
அத்திப்பழம் ரூ.13
மலவாழைப்பழம் ரூ.45
சீத்தா ரூ.20
ரூமேனியா ரூ.55
பூ வகைகள் (ஒரு கிலோ)
மல்லி ரூ.400
ஜாதி மல்லி ரூ.350
முல்லை ரூ.350
கனகாமரம் ரூ.600
சாம்பந்தி ரூ.80
சம்பங்கி ரூ.60
100 ரோஸ் ரூ.40
குயின் ரோஸ் ரூ.40
கோழி கொண்டை ரூ.40
வாடா மல்லி ரூ.40
செண்டு பூ ரூ.40
அரளி பூ ரூ.40