மும்பை:தங்கம் வெள்ளி விலை சரிவு
செவ்வாய், 20 ஜனவரி 2009 (14:10 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.70 குறைந்தது.
அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.115 குறைந்தது.
லண்டன் சந்தையிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 828.00/829.50 குறைந்தது. (நேற்று விலை 838.00/839.25 டாலர்).
பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.05/11.06 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 11.20/11.21 டாலர்).
யூரோவின் மதிப்பு குறைந்தாதலும், பெடேரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், தங்கம், வெள்ளியின் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,190
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,125
பார் வெள்ளி கிலோ ரூ.18,470.