மும்பை:தங்கம் விலை குறைவு

திங்கள், 19 ஜனவரி 2009 (14:12 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று தங்கத்தின் விலை குறைந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.50 குறைந்தது.

ஆனால் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.35 உயர்ந்தது.

ஆனால் ஆசிய நாட்டு சந்தைகளில் தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 838.00/839.50 டாலராக அதிகரித்தது. (வெள்ளிக் கிழமை விலை 828.00/829.25 டாலர்).

பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.22/11.23 டாலராக அதிகரித்தது. (வெள்ளிக் கிழமை விலை 10.83/10.84 டாலர்).

யூரோவிற்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்தது. இதனால் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தன என்று சிங்கப்பூரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,245
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,190
பார் வெள்ளி கிலோ ரூ.18,550.

வெப்துனியாவைப் படிக்கவும்