நிஃப்டி 92-சென்செக்ஸ் 277 புள்ளி உயர்வு

வெள்ளி, 16 ஜனவரி 2009 (17:30 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் இறுதி வரை சீராக அதிகரித்தன. காலையில் குறைந்து இருந்த தகவல் தொழில் நுட்ப பிரிவு குறியீட்டு எண்ணும் உயர்ந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 276.85 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,323.59 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 91.75 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 2,828.45 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 16.02, சுமால் கேப் 2.29, பி.எஸ்.இ 500- 77.09 புள்ளிகள் அதிகரித்தன.

இன்று நடந்த வர்த்தகத்தில் நெய்வேலி லிக்னெட் பங்கு விலை 10.76%, பெடரல் வங்கி 9.41%, திரிவேணி இன்ஜினியரிங் 9.06, கே.எஸ்.ஆர் எனர்ஜி 8.46%, ரேணுகா சுகர் 7.88% அதிகரித்தது.

அதே நேரத்தில் ஹிந்துஸ்தான் கன்ஸ்டரக்சன் 11.51%, யூனைடெட் ஸ்பிரிட் 7.25%, யூனிடெக் லிமிடெட் 5.49%, பஜாஜ் பைனான்ஸ் 4.99%, இந்தியா புல்ஸ் 4.96% குறைந்தது.

நேற்று அமெரிக்க அரசு நெருக்கடியில் இருக்கும் பாங்க் ஆப் அமெரிக்காவிற்கு 20 பில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்தது. இதை தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இதனால் இன்று காலை ஆசிய பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை நிலவியது.

நேற்று சரிவைச் சந்தித்த இந்திய பங்குச் சந்தைகளில், இன்று காலை குறியீட்டு எண்கள் ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கியது.

மத்திய அரசு சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மேலும் மூன்று இயக்குநர்களை நேற்று நியமித்தது. இதனால் தேசிய பங்குச் சந்தையில் இதன் பங்குகளில் அதிக அளவு வர்த்தகம் நடந்தது.

டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு இலாபம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இதன் பங்கு விலை 1.39% குறைந்தது.

ரிலையன்ஸ் குழுமத்தின் பங்கு விலைகள் குறிப்பிட்ட அளவு அதிகரித்தது. ரிலையன்ஸ் இன்ப்ராக்சர் விலை 7.34%, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் 6.56%, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 4.79% அதிகரித்தது.

என்.டி.பி.சி பங்கு விலை 7.69%, டாடா பவர் 4.89%, பார்தி ஏர்டெல் 4.77%,ஒ.என்.ஜி.சி 3.72% உயர்ந்தது.


மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1241 பங்குகளின் விலை அதிகரித்தது. 1162 பங்குகளின் விலை குறைந்தது. 94 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் வங்கி பிரிவு குறியீட்டு எண் 2.42%, பொதுத் துறை நிறுவனங்கள் பிரிவு 3.36%, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு 5.09%, மின் உற்பத்தி பிரிவு 4.29%, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு 1.83%, உலோக உற்பத்தி பிரிவு 3.45%, வாகன உற்பத்தி பிரிவு 1.00%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.03% தொழில் நுட்ப பிரிவு 2.18% அதிகரித்தது.

ரியல் எஸ்டேட் பிரிவு மட்டும் 2.39% குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்