கடும் சரிவுடன் துவங்கியது சென்செக்ஸ்

வியாழன், 15 ஜனவரி 2009 (11:48 IST)
இந்தியப் பங்குச்சந்தைகளின் வர்த்தகம் இன்று கடும் சரிவுடன் துவங்கியது. மும்பை பங்குச்சந்தைக் குறியீடு- சென்செக்ஸ் முற்பகல் 11.30 மணியளவில் 411 புள்ளிகள் சரிந்து 8,959 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடு- நிஃப்டி 117 புள்ளிகள் சரிந்து 2722 ஆக காணப்பட்டது.

இன்று வர்த்தகம் துவங்கிய போது 375 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ் குறியீடு, அதன் பின்னர் சரிவில் இருந்து மீளவில்லை. இதேபோல் தேசிய பங்குச்சந்தையிலும் துவக்கத்தில் ஏற்பட்ட சரிவின் காரணமாக பெரும்பாலான பங்குகளின் விலை குறைந்தே காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையில் க்ளென்மார்க் பார்ம்ஸி பங்குகள் 5.36% உயர்ந்து ரூ. 268.50 ஆகவும், யுனைடட் பிராஸ்பரஸ் 3.88% உயர்ந்து ரூ.112.50 ஆகவும், எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் 2.5% உயர்ந்து ரூ.44.70 ஆகவும் இருந்தது.

எனினும், யுனிடெக் நிறுவனப் பங்குகள் 8.4% சரிந்து ரூ32 ஆகவும், ஐசிஐசிஐ வங்கிப் பங்குகள் 8.37% சரிந்து ரூ.404 ஆகவும், விப்ரோ நிறுவனப் பங்குகள் 7% சரிந்து ரூ.227 ஆகவும் காணப்பட்டன.