மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.45 குறைந்தது.
அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.15 குறைந்தது.
லண்டன் சந்தையிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 852.00/853.00 டாலராக குறைந்தது. (வெள்ளிக் கிழமை விலை 856.00/856.25 டாலர்). பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.25/11.26 டாலராக குறைந்தது. (வெள்ளிக் கிழமை விலை 11.28/11.29 டாலர்).
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,415 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,350 பார் வெள்ளி கிலோ ரூ.18,530.