வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 42 பைசா சரிந்தது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.49.22 என்ற அளவில் இருந்தது. இது புதன் கிழமை மாலை நிலவரத்தை விட 42 பைசா அதிகம்.
புதன் இறுதி விலை 1 டாலர் ரூ.48.80 பைசா. புதன் கிழமையும் டாலர் மதிப்பு அதிகரித்து இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா குறைந்தது.
புதன் கிழமை பங்குச் சந்தையில் அந்நிய மூதலீட்டு நிறுவனங்கள் ரூ.1.111 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. இன்றும் இதே போக்கு தொடர்கின்றது. இன்று காலை இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிந்தன. இதை தொடர்ந்து டாலரின் தேவை அதிகரிப்பதால், அந்நியச் செலவாணி சந்தையில் டாலரின் விலை அதிகரித்தது.