மும்பை: தங்கம் வெள்ளி விலை சரிவு

செவ்வாய், 6 ஜனவரி 2009 (14:26 IST)
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.150 குறைந்தது.

அதே போல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.85 குறைந்தது.

ஆசிய நாட்டு சந்தைகளிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 862.00/863.00 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 871.00/872.00 டாலர்). பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 11.05/11.06 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 11.45/11.46 டாலர்).

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,340
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,275
பார் வெள்ளி கிலோ ரூ.18,365.

வெப்துனியாவைப் படிக்கவும்