பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

வெள்ளி, 2 ஜனவரி 2009 (10:57 IST)
மும்பை: பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தது.

காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 40.55, நிஃப்டி 4.30 புள்ளிகள் அதிகரித்தது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் சென்ற வருடம் 13 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், அவைகளின் சொந்த நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க, அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் மற்ற நாடுகளில் செய்திருந்த முதலீட்டை திரும்ப பெற்றன. அதே நேரத்தில் இவை டிசம்பர் மாதத்தில் அதிக அளவு விற்பனை செய்யவில்லை.
இந்நிலையிலும் இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு 53 பில்லியன் டாலர் மதிப்பிற்கு உள்ளது. இது பங்குச் சந்தையில் புழக்கத்தில் உள்ள மொத்த பங்குகளின் மதிப்பில், ஐந்தில் ஒரு பாகமாகும்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஐப்பான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க, அந்த நாட்டு அரசுகளும், ரிசர்வ் வங்கிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. குறிப்பாக அதிக அளவில் வட்டியை குறைத்துள்ளன. இதனால் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், இந்த வருடத்தில் மீண்டும் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பொருத்தே இந்திய பங்குச் சந்தையின் இயக்கம் இருக்கும்.

இன்று இரண்டு பங்குச் சந்தைகளில் காலையில் குறியீட்டு எண்கள் அதிகரித்தாலும், இன்று நாள் முழுவதும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். நண்பகலுக்கு பிறகு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

காலை 10.30 மணியளவில் நிஃப்டி 1.05 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 3,034.50 ஆக உயர்நதது.

இதே போல் சென்செக்ஸ் 14.52 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,917.98 ஆக அதிகரித்தது.

மிட் கேப் 30.47, பி.எஸ்.இ. 500- 15.75, சுமால் கேப் 41.63 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.25 மணியளவில் 1003 பங்குகளின் விலை அதிகரித்தும், 478 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 57 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று 92.04 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் 160.41 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்