புத்தாண்டில் உயர்வுடன் நிறைவடைந்தது பங்குச்சந்தை

வியாழன், 1 ஜனவரி 2009 (18:04 IST)
புத்தாண்டின் முதல் தினமான இன்று சிறிய உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள், வர்த்தகம் நிறைவடையும் போது குறிப்பிடத்தக்க உயர்வுடன் காணப்பட்டன.

மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 256 புள்ளிகள் உயர்ந்து 9,903 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 74 புள்ளிகள் உயர்ந்து 3,033 ஆக காணப்பட்டது.

கடந்த சில நாட்களாக 3,000 புள்ளிகளுக்கும் குறைவாகவே இருந்து வந்த நிஃப்டி, புத்தாண்டு தினமான இன்று மீண்டும் 3,000 புள்ளிகளை கடந்துள்ளது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் இன்று விற்பனை செய்யப்பட்ட 2,560 நிறுவனப் பங்குகளில், 2001 பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. 493 நிறுவனப் பங்குகள் விலை சரிந்துள்ளன. 66 நிறுவனங்கள் விலை மாற்றமின்றி காணப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்