மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65 குறைந்தது.
ஆனால் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.75 அதிகரித்தது.
லண்டன் சந்தையிலும் வெள்ளி விலை அதிகரித்தது. தங்கத்தின் விலை குறைந்தது.
இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 869.00/870.00 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 875.00/876.50). பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 10.94/10.95 டாலராக அதிகரித்தது. ( நேற்றைய விலை 10.90/10.91).
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,520 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,455 பார் வெள்ளி கிலோ ரூ.18,110.