சென்னை: முருங்கைக்காய் மீண்டும் கிலோ ரூ.100 ஆனது!
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (09:55 IST)
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வந்த முருங்கைக்காய் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரு கிலோ முருங்கைகாய் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இன்று கிலோவுக்கு ரூ.50 உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் தக்காளி நேற்று முன்தினம் கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று கிலோவுக்கு 2 ரூபாய் குறைந்து 13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சாம்பார் வெங்காயம், பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலை அதிகரிக்கவில்லை.
மல்லி, கனகாமரம், முல்லை ஆகிய பூக்களின் விலைகள் சற்று குறைந்துள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று விற்கப்படும் காய்கறி, பழங்கள், பூக்கள் விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
கோஸ் ரூ.15
கேரட் ரூ.15, 20
பீட்ரூட் ரூ.12
சவ்சவ் ரூ.10
நூக்கோல் ரூ.10
முள்ளங்கி ரூ.10
வெள்ளரிக்காய் ரூ.10
பீன்ஸ் ரூ.25
கத்திரிக்காய் ரூ.15
அவரைக்காய் ரூ.36
புடலங்காய் ரூ.12
வெண்டைக்காய் ரூ.20
மிளகாய் ரூ.06
குடை மிளகாய் ரூ.15, 20
முருங்கைகாய் ரூ.100
இஞ்சி ரூ.28
தேங்காய் (ஒன்று) ரூ.09
சேனைக் கிழங்கு ரூ.12
சேம்பு ரூ.15
உருளைக்கிழங்கு ரூ.10
கோவக்காய் ரூ.13
சுரக்காய் ரூ.08
நாட்டு தக்காளி ரூ.13
பெங்களூரு தக்காளி ரூ.13
பூசணி ரூ.10, 12
நாசிக் வெங்காயம் ரூ.15
சாம்பார் வெங்காயம் ரூ.25
பட்டாணி ரூ.25
மாங்காய் ரூ.20
பாகற்காய் ரூ.15
காலிபிளவர் (ஒன்று) ரூ.10
பரங்கிகாய் ரூ.12
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஸ்ட்ராபெர்ரி ரூ.240
இந்தியன் ஆப்பிள் ரூ.70
வாஷிங்டன் ஆப்பிள் ரூ.95
நாவல் ஆரஞ்சு ரூ.70
இந்தியன் ஆரஞ்சு ரூ.45
சாத்துக்குடி ரூ.30
கொய்யா ரூ.18
கருப்பு திராட்சை ரூ.30
பச்சை திராட்சை ரூ.45
கணேஷ் மாதுளை ரூ.65
காபூல் மாதுளை ரூ.75
செவ்வாழைப்பழம் ரூ.20
கற்பூரவள்ளி ரூ.12
ரஸ்தாளி ரூ.15
பச்சை வாழைப்பழம் ரூ.18
பப்பாளி ரூ.15
சப்போட்டா ரூ.16
கிரினி பழம் ரூ.12
தர்பூசணி ரூ.14
நேந்திரம் பழம் ரூ.30
அத்திப்பழம் ரூ.25
மலவாழைப்பழம் ரூ.40
சீத்தா ரூ.20
ரூமேனியா ரூ.40
பூ வகைகள் (ஒரு கிலோ)
மல்லி ரூ.450
ஜாதி மல்லி ரூ.250
முல்லை ரூ.250
கனகாமரம் ரூ.500
சாம்பந்தி ரூ.80
சம்பங்கி ரூ.60
100 ரோஸ் ரூ.30
குயின் ரோஸ் ரூ.30
கோழி கொண்டை ரூ.60
வாடா மல்லி ரூ.60
செண்டு பூ ரூ.60
அரளி பூ ரூ.60