மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கமாக இருந்த குறியீட்டு எண்கள், மதியம் 2 மணிக்கு பிறகு அதிகரிக்க துவங்கின. ஆனால் இறுதியில் நேற்றைய நிலவரத்தை எட்டவில்லை
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 9.44 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,645.46 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 8.10 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,920.15 ஆக குறைந்தது.
ஆனால் சுமால் கேப் 48.14 பி.எஸ்.இ 500- 14.57, மிட் கேப் 54.84 புள்ளிகள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1557 பங்குகளின் விலை அதிகரித்தது. 911 பங்குகளின் விலை குறைந்தது. 97 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.