ரூபாய் மதிப்பு 25 பைசா சரிவு

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (12:25 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா சரிந்தது.

பங்குச் சந்தை சரிவினால் டாலரின் தேவை அதிகரித்தது. இதனால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.50.53/50.54 என்ற அளவில் தொடங்கியது. இது நேற்றைய இறுதி விலையை விட 25 பைசா அதிகம்.

நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ. 50.28/50.29 பைசா.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ. 50.46/50.47 என்ற அளவில் இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்