சென்செக்ஸ் 253 -நிஃப்டி 72 புள்ளி சரிவு

திங்கள், 1 டிசம்பர் 2008 (16:26 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த பங்குகள், மதியம் சுமார் 2 மணியளவில் குறைய துவங்கின.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 252.85 (2.78%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 8,839.87 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 72.20 (2.62%) புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,682.90 ஆக குறைந்தது.

மிட் கேப் 39.29 (1.36%), சுமால் கேப் 6.88 (0.21%), பி.எஸ்.இ 500- 72.39 (2.20%) புள்ளிகள் குறைந்தன.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் 5.34%, வங்கி 3.87%, உலோக உற்பத்தி 0.72% , நுகர்வோர் பொருட்கள் 3.79%, மின் உற்பத்தி 3.78%, பெட்ரோலிய நிறுவனங்கள் 1.51%, பொதுத்துறை நிறுவனங்கள் 2.00%, தொழில் நுட்பம் 1.40%, தகவல் தொழில் நுட்பம் 0.99% வாகன உற்பத்தி 4.64% குறைந்தது.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 970 பங்குகளின் விலை அதிகரித்தது. 1160 பங்குகளின் விலை குறைந்தது. 65 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்