ஹோட்டல் நிறுவனப் பங்குகள் சரிவு!

வெள்ளி, 28 நவம்பர் 2008 (13:25 IST)
மும்பையில் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதால், மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை ஹோட்டல் நிறுவனப் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்தன.

இதேபோல மும்பைக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்ற பயத்தால், கிங் ஃபிஷர் உள்ளிட்ட சில விமான நிறுவனங்களின் பங்குகளும் சரிவை எதிர்கொண்டன.

மும்ம்பை பங்குச் சந்தை குறியீட்டெண் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதுமே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

பயங்கரவாதிகள் புகுந்துள்ள நட்சத்திர விடுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் கமாண்டோ படையினர் ஈடுபட்டுள்ள நிலையில், பங்கு வர்த்தகமும் நடைபெற்றது.

பிற்பகல்வாக்கில் மும்பை பங்குச் சந்தை 60 புள்ளிகள் சரிவுடன் 8,967.26 ஆக இருந்தது.

இதேபோல் நிஃப்டி - தேசியப் பங்குச் சந்தை குறியீட்டெண் 25 புள்ளிகள் சரிவுடன் 2,727.50 ஆக இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்