மும்பை: அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா குறைந்தது.
அந்நியச் செலவாணி சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கும் போது, 1 டாலரின் மதிப்பு ரூ. 50.02 பைசாவாக இருந்தது.
அந்நிய நாட்டு வங்கிகளும், இறக்குமதியாளர்களும் டாலரை வாங்கினார்கள்.
வர்த்தகம் நடக்கும் போது அதிக மாற்றம் இல்லை. 1 டாலர் ரூ.50.05 என்ற அளவில் விற்பனையானது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 2 பைசா அதிகம்.
வெள்ளிக் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.50.03.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்: 1 டாலர் மதிப்பு ரூ.50.09 பைசா. 1 யூரோ மதிப்பு ரூ.63.40 100 யென் மதிப்பு ரூ.52.53 1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.74.90.