மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று பார் வெள்ளி விலை ரூ.65 அதிகரித்தது. ஆனால் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.125 குறைந்தது.
இதற்கு நேர்மாறாக ஆசிய நாட்டு சந்தைகளில் நிலைமை இருந்தது.
ஆசிய நாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 789.00/789.50 டாலராக அதிகரித்தது. (வெள்ளிக் கிழமை விலை 757.00/757.25 டாலர்).
பார் வெள்ளி விலை 09.51/09.52 டாலராக குறைந்தது. (வெள்ளிக் கிழமை விலை 09.53/09.54 டாலர்). யூரோவுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்ததால் தங்கம் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,945 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,870 பார் வெள்ளி கிலோ ரூ.16,840.