மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள், இறுதி வரை தொடர்ந்து குறைந்தன.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 529.35 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 12,526.32 ஆக குறைந்தது.
அதே போல் மிட் கேப் பிரிவு 146.36, சுமால் கேப் 141.40, பி.எஸ்.இ 500- 182.57 புள்ளிகள் குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 132.45 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3818.45 ஆக சரிந்தது.
ரியல் எஸ்டேட் 2.84%, பெட்ரோலிய நிறுவனங்கள் 5.74%, வங்கி 3.88%, தொழில் நுட்பம் 3.34%, தகவல் தொழில் நுட்பம் 3.34%, மின் உற்பத்தி 2.50%, நுகர்வோர் பொருட்கள் 3.34%, பொதுத்துறை நிறுவனங்கள் 2.28%, உலோக உற்பத்தி பிரிவு 7.01% குறைந்தது.
மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 669 பங்குகளின் விலை அதிகரித்தது. 1924 பங்குகளின் விலை குறைந்தது. 51 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.