சென்னை: தங்கம் விலை மேலும் சரிவு!
திங்கள், 22 செப்டம்பர் 2008 (14:04 IST)
தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு மேலும் 32 ரூபாய் சரிந்து ரூ.9,288 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏறுவதும் குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு பவுனுக்கு ரூ.32 குறைந்து 9,288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு மேலும் ரூ.32 சரிந்து ரூ.9,256 க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை 10 கிலோவுக்கு ஒரு ரூபாய் குறைந்துள்ளது.
சென்னை சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,485 (ரூ.12,525)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,256 (ரூ.9,288)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,157 (ரூ.1,161)
வெள்ளி (பார்) கிலோ ரூ.19,705 (ரூ.19,850)
வெள்ளி 10 கிராம் ரூ.211 (ரூ.212.50)
வெள்ளி 1 கிராம் ரூ.21.1 (ரூ.20.85)