பங்குச் சந்தையில் சரிவு!

செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (11:09 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, நேற்று போலவே, இன்றும் எல்லா பிரிவு பங்கு விலைகளும் குறைந்தன.

அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனங்களான லெக்மான் பிரதர்ஸ் ஹோல்டிங், மெரில் லாஞ்ச் ஆகிய இரு நிறுவனங்களும் கடுமையான நஷ்டத்தை சந்தித்தன. இதில் லெக்மான் நிறுவனம் திவாலா தாக்கீது கொடுத்தது. மெரில் லாஞ்ச் நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட, இதை பேங்க் ஆப் அமெரிக்கா வாங்கியது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சிக்கல், மற்ற நாடுகளையும் பாதித்தது. நேற்று அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதே போல் இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளும் கடும் நெருக்கடியை சந்தித்தன.

ஹாங்காங்கின் ஹாங்செங் 1,142, ஜப்பானின் நிக்கி 651 புள்ளி குறைந்தது. இதே போல் எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் குறைந்தன.

இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையும் தொடர்ந்து சரிவையை சந்தித்து வருகிறது. குறிப்பாக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்து வருகின்றன.

காலை 10.30 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 244.07 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 13,287.20 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 76.05 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 3996.85 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 125.90, சுமால் கேப் 134.48, பி.எஸ்.இ. 500- 99.37 புள்ளி குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.25 மணியளவில் 306 பங்குகளின் விலைகள் அதிகரித்தது. 1405 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 35பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

இன்று நடந்த வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், உலோக உற்பத்தி, வங்கி, மின் உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் பிரிவு பங்குகள் அதிக அளவு குறைந்தன.

சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் டாடா மோட்டார்ஸ் தவிர, மற்ற பங்குகளின் விலை குறைந்தது.








வெப்துனியாவைப் படிக்கவும்