தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், சில நிமிடங்களிலேயே குறைந்தன.
இன்றும் நேற்றைய நிலவரம் போல் இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு பங்குகளின் விலையும் குறைந்தன. இன்று ஆகஸ்ட் மாத முன்பேர வர்த்தகத்தின் ஒப்பந்தங்கள் முடிவடைகின்றன. இதனால் இன்று பங்குச் சந்தை அதிக வேறுபாடுடன் இருக்கும். அத்துடன் நண்பகலுக்கு பிறகு மாறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
இந்திய பங்குச் சந்தைகளில் மட்டுமல்லாது ஆசியாவில் ஹாங்காங், ஜப்பான், தென்கொரிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண் குறைந்தன. ஐரோப்பிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தை பொறுத்தே, இங்கு நிலைமை மாற வாய்ப்புண்டு.
காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 7.30 புள்ளி அதிகரித்தது. அதே நேரத்தில் நிஃப்டி 5.40 புள்ளி குறைந்தது.
இன்று காலை ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சிலவற்றில் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்தும் இருந்தன.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.32 மணியளவில் 695 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 990 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன, 73 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
காலை 10.30 மணிக்கு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 54.30 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,242.49 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 20.75 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4271.35 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 16.51, சுமால் கேப் 12.28, பி.எஸ்.இ. 500- 15.84 புள்ளி குறைந்தது.
இன்று காலை நடந்த வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், பொதுத்துறை, பெட்ரோலிய நிறுவனங்களின் பங்கு விலை அதிக அளவு குறைந்தது.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நடந்த வர்த்தகத்தில் ரூ.1,751.75 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,784.24 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
இவை நேற்று ரூ.32.49 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.757.28 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.594.01 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இவை நேற்று ரூ.163.27 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
ஆகஸ்ட் 27 ஆம் தேதிவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 4,904.30 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து ஆக.27 ஆம் தேதி வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.68,670.31 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 47,505.35 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
ஐரோப்பாவில் நேற்று ஜெர்மனி, சுவிட்சர்லாந்து தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் அதிகரித்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 57.40 புள்ளி அதிகரித்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 89.64, நாஸ்டாக் 20.49, எஸ் அண்ட் பி 10.15 புள்ளி அதிகரித்தது.
இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஹாங்காங், ஜப்பான், தென்கோரியா, தைவான் பங்குச் சந்தைகளில் பாதகமான நிலை இருந்தது. மற்றவைகளில் குறியீட்டு எண் அதிகரித்தது.
சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 3.85, சீனாவின் சாங்காய் காம்போசிட் 11.92, பிலிப்பைன்சின் பி.எஸ்.இ காம்போசிட் 9.05 புள்ளி அதிகரித்தது.
ஜப்பானின் நிக்கி 0.21, ஹாங்காங்கின் ஹாங்செங் 289.16, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 9.39, தைவான் வெயிட் 9.40 புள்ளி குறைந்தது.