அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 28 பைசா சரிந்துள்ளது.
நேற்று அன்னியச் செலாவணி சந்தை முடிவின் போது ரூ.43.79/80 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது ரூ.44.07/08 ஆக சரிந்தது.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட கடும் ஏற்றத்தாழ்வு, டாலருக்கான தேவை அதிகரிப்பு உள்ளிட்டவையே இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கு காரணம் என வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.