தங்கம் வெள்ளி விலை உயர்வு!
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (14:32 IST)
மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.100 அதிகரித்தது.
பார் வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.335 உயர்ந்தது.
அந்நிய நாட்டு சந்தையிலும் விலை அதிகரித்தன.
நியூ யார்க் தங்கச் சந்தையில் நேற்று ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 835.55/837.55 டாலராக ஆக அதிகரித்தது. முன்தினம் விலை 832.40/833.40 டாலர்.
இதேபோல் பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 13.80/13.86 டாலராக அதிகரித்தது. முன்தினம் விலை 13.45/13.50 டாலர்.
கச்சா எண்ணெய் விலை அதிகப்பதாலும், டாலரின் மதிப்பு சரிவதால் தங்கம், வெள்ளியின் விலை அதிகரிப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
தங்கம், வெள்ளி விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,910
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,840
பார் வெள்ளி கிலோ : ரூ.21,320