பங்குச் சந்தைகளில் சரிவு

வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (10:40 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் சரிந்தன.

காலை 10.06 மணியளவில் சென்செக்ஸ் 94.77, நிஃப்டி 33.75 புள்ளி சரிந்தது.

இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. அத்துடன் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 150 பைசா குறைந்துள்ளது.

உலக சந்தையில் குறைந்து வந்த பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இன்று இதன் விலை 1 பீப்பாய் 117 டாலராக உயர்ந்தது.

மத்திய அரசு இன்று மாலை பணவீக்கம் பற்றிய அறிவிப்பை வெளியிடும். பணவீக்கம் 12.60 புள்ளிகள் என்ற அளவில் அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற காரணங்களினால், இன்று பங்குச் சந்தையின் எல்லா பிரிவிலும் சரிவே இருக்கும்.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.35 மணியளவில் 690 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 1071 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 63 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணிக்கு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 210.98 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,467.25 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 66.75 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4415.75 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 38.17, சுமால் கேப் 19.70 பி.எஸ்.இ. 500- 68.62 புள்ளி சரிந்தது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நடந்த வர்த்தகத்தில் ரூ.1,724.89 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,171.23 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நேற்று ரூ.447.34 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.575.42 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.369.82 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. இவை நேற்று ரூ.205.60 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஆகஸ்ட் 20 ஆம் தேதிவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 3,577.74 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து ஆக.20 ஆம் தேதி வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.67,343.75 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 46,173.63 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஐரோப்பாவில் நேற்று பெல்ஜியம், இத்தாலி, சுவிட்சர்லாந்து பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண் குறைந்தது. மற்றவைகளில் அதிகரித்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 51.40 புள்ளி அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 68.88, நாஸ்டாக் 4.72 புள்ளி அதிகரித்தது. இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இந்தோனேஷியா தவிர மற்றவைகளில் குறியீட்டு எண் குறைந்தது.

சீனாவின் சாங்காய் காம்போசிட் 66.39, ஜப்பானின் நிக்கி 87.90 ஹாங்காங்கின் ஹாங்செங் 373.19, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 19.83, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 25.29, தைவானின் தைவான் வெயிட் 91.40, பிலிப்பைன்சின் பி.எஸ்.இ காம்போசிட் மட்டும் 24.74 புள்ளி குறைந்தது.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா காம்போசிட் 24.72 புள்ளி அதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்