வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலவாணி சந்தையில், கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்தது.
இன்று காலை 1 டாலரின் மதிப்பு ரூ.43.70 ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 10 பைசா அதிகம். நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.43.60.
கடந்த வாரம் பங்குச் சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்தது இதனால் அதிக அளவு அந்நிய முதலீடு திரும்ப பெறப்பட்டுள்ளன. அத்துடன் இன்று பொதுவுடைமை, அந்நிய வங்கிகளின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இதனால் குறைந்த அளவு டாலரே அந்நியச் செலவாணி சந்தைக்கு வந்ததால், டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ.43.66 முதல் 43.86 என்ற அளவில் வர்த்தகம் நடந்தது.