சென்செக்ஸ் 292, நிஃப்டி 68 புள்ளி சரிவு!

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (17:46 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கி பத்து நிமிடங்களில் குறியீட்டு எண்கள் குறைய துவங்கின. மதியம் 1 மணிக்கு பிறகு எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

மத்திய அரசு நண்பகலில் இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டிற்கான தொழில் துறை வளர்ச்சி புள்ளி விபரங்களை வெளியிட்டது. இவை சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிக அளவு குறைந்து இருந்தன. இது பங்குச் சந்தையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இத்துடன் ஆசிய பங்குச் சந்தைகளிலும் காலையில் இருந்த நிலை மாறி, சரிவை சந்தித்தன. இதுவும் பங்குச் சந்தை சரிவை சந்திப்பதற்கு ஒரு காரணம்.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 291.79 புள்ளி சரிந்து குறியீட்டு எண் 15,212.13 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 68.15 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4,552.15 ஆக சரிந்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சிலவற்றில் சாதகமாகவும், சிலவற்றில் பாதகமாகவும் இருந்தது. மாலை 4.45 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ. 100- 8.10 புள்ளி அதிகரித்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,100 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,556 பங்குகளின் விலை குறைந்தது, 73 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 47.15, சுமால் கேப் 50.93, பி.எஸ்.இ. 100- 142.63, பி.எஸ்.இ 200- 31.14, பி.எஸ்.இ-500 92.53 புள்ளிகள் குறைந்தது.

இன்று நடந்த வர்த்தகத்தில் உலோக உற்பத்தி, வங்கி, தகவல் தொழில் நுட்பம், ரியல் எஸ்டேட், வாகன உற்பத்தி பிரிவுகளின் குறியீட்டு எண் அதிக அளவு குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 141.90, சி.என்.எக்ஸ். ஐ.டி. 96.35, பாங்க் நிஃப்டி 232.40, சி.என்.எக்ஸ்.100- 67.10, சி.என்.எக்ஸ். டிப்டி 81.80, சி.என்.எக்ஸ். 500- 51.70, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 56.55, மிட் கேப் 50- 32.40 புள்ளிகள் குறைந்தது.

நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் பாரத் பெட்ரோலியம் 2.05%, சீமென்ஸ் 1.67% கேரின் 1.30% ஐ.டி.சி 0.98%, ரிலையன்லஸ் இன்டஸ்டிரிஸ் 0.95% மகேந்திரா அண்ட் மகேந்திரா 0.75% உயர்ந்தது.

டாடா ஸ்டீல் 5.72%, மாருதி 5.59%, ஸ்டெர்லைட் 4.61%, ஹெச்.டி.எப்.சி 4.27%, இன்போசியஸ் 3.98% விலை குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்