மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.250ம், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.600ம் குறைந்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் தங்கத்தில் முதலீடு குறையத் துவங்கியுள்ளதன் காரணமாக நியூ யார்க் தங்கச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 893.25/894.25 ஆக இருந்தது 895.55/896.95 டாலர்களாக குறைந்துள்ளது.
இதேபோல் பார் வெள்ளியின் விலையில் சரிவு ஏற்பட்டு வெள்ளி விலை 1 அவுன்ஸ் 16.92 / 16.98 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 17.00/ 17.05 டாலர்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,220க்கும், 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,275க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.24,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.