தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிக வேறுபாடு இல்லாமல் இருந்தது. வர்த்தகம் தொடங்கிய பிறகு தகவல் தொழில் நுட்ப பிரிவு தவிர மற்ற எல்லா பிரிவுகளிலும் அதிகரித்து வருகிறது.
காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 55.73 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 14,633.60 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 9.55 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4404.90 ஆக இருந்தது.
ஆசிய பங்குச் சந்தைகள் காலை சரிவை சந்தித்தன. இதே போல் நேற்று அமெரிக்கா, ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் பாதமான நிலை இருந்தது.
வங்கி, ரியல் எஸ்டேட், பொதுத்துறை, வாகன உற்பத்தி, மின் உற்பத்தி, நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களின் பிரிவு அதிகரித்து இருந்தது.
இந்த நிலை நண்பகலுக்கு பிறகு மாறுவதற்கு வாய்ப்பு இருப்பாதாக தெரிகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 11.30 மணி நிலவரப்படி 1654 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 611 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 70 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
காலை 11.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 92.28 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 14,670.15 ஆக அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 23.50 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4418.85 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 82.66, சுமால் கேப் 88.76, பி.எஸ்.இ. 500- 54.87 புள்ளி அதிகரித்தது.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நடந்த வர்த்தகத்தில் ரூ.1,808.44 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,316.25 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
இவை நேற்று ரூ.507.81 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 826.93 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.873.90 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இவை நேற்று ரூ.46.97 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஆகஸ்ட் மாதத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 1,095.09 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.64,861.09 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஐரோப்பாவில் நேற்று எல்லா மற்ற பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 34.50 புள்ளி குறைந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 42.17 நாஸ்டாக் 25.40 எஸ் அண்ட் பி500-11.30 புள்ளி குறைந்தது.
இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஜப்பான், பிலிப்பைன்ஸ் தவிர மற்றவைகளில் பாதகமான நிலை நிலவியது.
ஜப்பானின் நிக்கி 37.12 புள்ளி அதிகரித்தது.
ஆனால் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 4.13, இந்தோனேஷியாவின் ஜகார்த்தா காம்போசிட் 34.72, ஹாங்காங்கின் ஹாங்சாங் 502.89, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 40.17, தைவானின் தைவான் வெயிட் 142.38, சீனாவின் சாங்காய் காம்போசிட் 9.09 புள்ளி குறைந்தது.