பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

வியாழன், 31 ஜூலை 2008 (10:51 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் சில நிமிடங்களிலேயே குறைய தொடங்கின.

பங்குச் சந்தையின் முன்பேர சந்தை ஒப்பந்தம் இன்று முடிவடைகின்றது. அத்துடன் உலக சந்தையில் சில நாட்களாக குறைந்து வந்த கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பீப்பாய்க்கு 4 டாலர் அதிகரித்தது. வங்கி வட்டி உயர்வு, நிறுவனங்களின் முதல் காலாண்டு இலாபம் சரிவு ஆகிய காரணங்களினால் பங்குச் சந்தை பாதித்தது. இன்று பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்று தெரிகிறது.

காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 187.15 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 14,187.15 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 8 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4305.25 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.15 மணி நிலவரப்படி 778 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 679 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 45 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 57.74 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,187.15 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 4.55 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4318.10 ஆக அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 57.74 சுமால் கேப் 8.02 புள்ளி அதிகரித்தது. பி.எஸ்.இ. 500- 10.47 புள்ளி குறைந்தது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நடந்த வர்த்தகத்தில் ரூ.2,266.00 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,894.47 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இவை நேற்று ரூ.628.47 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 1,536.00 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.863.88 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இவை நேற்று ரூ.672.12 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஜூலை மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 5,098.87 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.64,260.88 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பாவில் நேற்று எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 101.50 புள்ளி அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 155.40, நாஸ்டாக் 10.10, எஸ் அண்ட் பி500-21.07 புள்ளி அதிகரித்தது.

இன்று ஆசிய நாடுகளில் ஜப்பான், சீனா, தைவான் பங்குச் சந்தைகளில் பாதகமான நிலை இருந்தது. மற்றவைகளில் குறியீட்டு எண் அதிகரித்தது.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 4.27, இந்தோனேஷியாவின் ஜகார்த்தா காம்போசிட் 39.46, ஹாங்காங்கின் ஹாங்சாங் 116.03, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 12.86 புள்ளி அதிகரித்தது.

ஜப்பானின் நிக்கி 46.12, தைவானின் தைவான் வெயிட் 86.48, சீனாவின் சாங்காய் காம்போசிட் 54.37 புள்ளி குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்