பங்குச் சந்தைகளில் உயர்வு!

வியாழன், 17 ஜூலை 2008 (11:49 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

அமெரிக்கா வெளியிட்ட புள்ளி விபரப்படி, அதன் பெட்ரோலிய பொருட்களின் இருப்பு அதிகரித்துள்ளது. இது கச்சா எண்ணெய் வாங்குவது குறையும். இதனால் நியூயார்க் முன்பேர சந்தையில் இரண்டாவது நாளாக கச்சா எண்ணெய் விலை நேற்றும் குறைந்தது. ஆகஸ்ட் மாத கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய்க்கு சுமார் 4 டாலர் குறைந்தது. இதன் விலை 146 டாலரில் இருந்து 134 டாலரில் இருந்து 132 டாலர் வரை விற்பனையானது.

அத்துடன் நேற்று அமெரிக்கா, ஐரோப்பா பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை நிலவியது. இன்று காலை ஆசிய பங்குச் ச‌ந்தைகளிலும் குறியீட்டு எண்கள் உயர்ந்தன. இதனால் இன்று இந்திய பங்குச் சந்தைகளிலும் பாதிப்பாக இருக்காது என்றே தெரிகிறது.

மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலை 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 516 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 13,091.63 ஆகவும், நிஃப்டி 133 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 3949.45 ஆக இருந்தது.

வங்கி, ரியல் எஸ்டேட் தகவல் தொழில் நுட்பம், நுகர்வோர் பொருட்கள், வாகன உற்பத்தி பிரிவு குறியீட்டு எண்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 11.15 மணி நிலவரப்படி 1,327 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 800 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 61 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

மத்திய அரசு இன்று மாலை 5 மணியளவில் பணவீக்கம் பற்றிய அறிவிப்பை வெளியிடும். முன்பு பணவீக்கம் பற்றிய அறிவிப்பு வெள்ளிக் கிழமை நண்பகலில் வெளியிடப்பட்டது. இந்த வாரம் முதல் வியாழக்கிழமை மாலையில் வெளியிடப்படும். ஜூலை மாதத்தின் முதல் வார பணவீக்கம் 12 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கலாம். இதனால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தையும், ரொக்க கையிருப்பு விகிதத்தையும் அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது.

காலை 11.07 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 307.00 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 12,882.80 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 70.90 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 3887.60 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 48.03 சுமால் கேப் 53.69 பி.எஸ்.இ. 500- 83.76 புள்ளி அதிகரித்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,688.43 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,917.43 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.229.00 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 755.95 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.741.83 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.14.12 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஜூலை மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 4,282.51 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.63,444.51 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பாவில் நேற்று பிரிட்டன் தவிர மற்ற எல்லா பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 21.30 புள்ளி குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 276.74 எஸ்.அண்ட்.பி 500 -30.45. நாஸ்டாக் 69.14 புள்ளி அதிகரித்தது.

இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இந்தோனேஷியா தவிர மற்றவைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 18.55, ஜப்பானின் நிக்கி 150.47, ஹாங்காங்கின் ஹாங்சாங் 545.08, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 44.30, சீனாவின் சாங்காய் காம்போசிட் 20.24 புள்ளி அதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்