சென்செக்ஸ் 176 புள்ளி சரிவு!

செவ்வாய், 8 ஜூலை 2008 (18:23 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் சரிந்தன. காலையில் இருந்து பங்குகளின் விலைகள் அதிகரிக்காமல், மதியம் சுமார் 2.45 மணிக்கு பிறகு குறியீட்டு எண்கள் சிறுது அதிகரிக்க‌த் துவங்கின.

ரியல் எஸ்டேட், வங்கி, மின்உற்பத்தி நிறுவன பங்குகளின் விலை அதிக அளவு குறைந்தது. வர்த்தம் நடக்கும் போது சிறிது அதிகரித்து இறுதியில் ஆறுதல் அளிக்கும் நிலையில் முடிந்தது

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 176.34 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 13,349.65 ஆக சரிந்ததது.

ஆசிய பங்குச் சந்தைகளில் சீனா, பிலிப்பைன்ஸ் தவிர மற்றவைகளில் குறைந்தன.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் பாதகமான போக்கு நிலவியது. மாலை 4.45 மணி நிலவரப்படி பிரிட்டனில் எப்டிஎஸ்இ-100 89.20 புள்ளி குறைந்தது.

அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 41.45 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 3988.55 ஆக குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1156 பங்குகளின் விலை அதிகரித்தது, 1417 பங்குகளின் விலை குறைந்தது, 83 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 23.82 சுமால் கேப் 30.39 பி.எஸ்.இ. 100-71.69 பி.எஸ்.இ. 200-14.77 பி.எஸ்.இ. 500- 44.62 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 9.85, பாங்க் நிஃப்டி 31.20, மிட் கேப் 50- 1.40 புள்ளி அதிகரித்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி 129.20 சி.என்.எக்ஸ்.100- 33.05 சி.என்.எக்ஸ். டிப்டி 36.90, சி.என்.எக்ஸ். 500- 21.80 சி.என்.எக்ஸ். மிட் கேப் 8.30 புள்ளி குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 138.78, வாகன உற்பத்தி பிரிவு 10.58, ரியல் எஸ்டேட் பிரிவு 39.71, தகவல் தொழில் நுட்ப பிரிவு 129.77 புள்ளி குறைந்தது.

உலோக உற்பத்தி பிரிவு 8.79, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 145.72, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 46.62, மின் உற்பத்தி பிரிவு 9.88, வங்கி பிரிவு 3.35 அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 20 பங்கு விலை அதிகரித்தது, 30 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 26 பங்குகளின் விலை அதிகரித்தது, 23 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்கின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 6 பங்குகளின் விலை அதிகரித்தது, 14 பங்குகளின் விலை குறைந்தது.

பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 7 பங்குகளின் விலை அதிகரித்தது. 5 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 25 பங்குகளின் விலை அதிகரித்தது, 23 பங்குகளின் விலை குறைந்தது. 2 பங்கின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்