சென்செக்ஸ் 341 புள்ளிக‌ள் சரிவு!

திங்கள், 30 ஜூன் 2008 (17:14 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் குறைந்தன. காலையில் 11 மணியளவில் எல்லா பிரிவு பங்குகளும் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. அத்துடன் தகவல் தொழில் நுட்ப பிரிவு தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் குறைய துவங்கின. நண்பகல் 2.30 மணியளவில் தகவல் தொழில் நுட்ப பிரிவும் குறைய துவங்கியது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 340.62 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 13,461.60 ஆக சரிந்தது.

இந்திய பங்குச் சந்தைமட்டுமல்லாது, ஆசிய பங்குச் சந்தைகளிலும் இன்று ஏற்ற இறக்கமாக இருந்தது. காலையில் ஜப்பான், சிங்கப்பூர் தவிர மற்ற பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்து இரு‌ந்தன. ஆனால் மாலையில் ஹாங்காங் தவிர மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் குறைந்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தையில் இன்று சிலவற்றில் உயர்ந்தும், சிலவற்றில் குறைந்தும் இருந்தன. மதியம் 4.55 மணி நிலவரப்படி பிரிட்டனில் எப்டிஎஸ்இ-100 52.70 புள்ளி அதிகரித்தது.

அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 96.10 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4040.55 ஆக குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 542 பங்குகளின் விலை அதிகரித்தது, 2107 பங்குகளின் விலை குறைந்தது, 43 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 172.27 சுமால் கேப் 236.11 பி.எஸ்.இ. 100-199.10 பி.எஸ்.இ. 200-47.26 பி.எஸ்.இ. 500- 151.82 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 254.95, சி.என்.எக்ஸ். ஐ.டி 23.20 பாங்க் நிஃப்டி 183.85 சி.என்.எக்ஸ்.100- 99.85, சி.என்.எக்ஸ். டிப்டி 88.05, சி.என்.எக்ஸ். 500- 90.30 சி.என்.எக்ஸ். மிட் கேப் 179.90 மிட் கேப் 50- 82.35 புள்ளி குறைந்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் வெள்ளிக் கிழமை நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,301.47 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.4,004.58 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,281.82 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.976.11 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 58,953.34 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. இந்த மாதத்தில் மட்டும் ரூ.12,458.49 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 378.47, உலோக உற்பத்தி பிரிவு 85.15, வாகன உற்பத்தி பிரிவு 104.30 நுகர்வோர் பொருட்கள் பிரிவு 361.45, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 155.20, மின் உற்பத்தி பிரிவு 82.87, வங்கி பிரிவு 209.97, ரியல் எஸ்டேட் பிரிவு 331.78 புள்ளி குறைந்தது. தகவல் தொழில் நுட்ப பிரிவு 15.07 புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 11 பங்கு விலை அதிகரித்தது, 39 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி ஜூனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 8 பங்குகளின் விலை அதிகரித்தது, 42 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 6 பங்குகளின் விலை அதிகரித்தது, 14 பங்குகளின் விலை குறைந்தது. ‌‌நி‌ஃ‌‌ப்டி பா‌ங்‌க் ‌பி‌ரி‌வி‌ல் உ‌ள்ள 12 ப‌ங்கு‌க‌ளி‌ல், எ‌ல்லா ப‌ங்குக‌ளி‌ன் ‌விலை குறை‌ந்தது. நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 2 பங்குகளின் விலை அ‌திகரித்தது, 48 பங்குகளின் விலை குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்