திங்கள், 30 ஜூன் 2008 (15:36 IST)
மும்பையில் இன்று காலை பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.25ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.35 அதிகரித்தது.
அந்நிய நாட்டு சந்தைகளிலும் தங்கத்தின் விலை குறைந்தது. ஆனால் வெள்ளியின் விலை சிறிது அதிகரித்தது.
நியூயார்க் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 925.90/926.90 டாலராக குறைந்தது. முந்தைய நாள் விலை 927.20/928.20 டாலர்.
பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 17.55/17.60 டாலராக அதிகரித்தது. முந்தைய நாள் விலை விலை 17.52/17.61, டாலர்.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,915
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,860
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,660