லாரிகள் வேலை நிறுத்தத்தால் காய்கறி விலை உயருகிறது!
திங்கள், 30 ஜூன் 2008 (10:12 IST)
webdunia photo
WD
நாளை நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால் காய்கறி விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கோயம்பேடு வியாபாரிகள் சங்கத் முன்னாள் தலைவர் செளந்திரராஜன் கூறினார்.
டீசல் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும், சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம் ஈடுபடுகிறது. இந்த போராட்டத்தை அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்து உள்ளது. இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்து உள்ளது.