மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், மதியம் 1 மணியளவில் குறைய துவங்கின.
இந்திய பங்குச் சந்தைமட்டுமல்லாது, ஆசிய பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண் அதிகரித்தும், மற்றவைகளில் குறைந்தும் காணப்பட்டது.
ஐரோப்பிய பங்குச் சந்தையில் நேற்று சாதகமான போக்கு நிலவியது. ஆனால் இன்று எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனில் எப்டிஎஸ்இ-100 70.20 புள்ளி குறைந்தது.
இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 186.74 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 14,106.58 ஆக குறைந்தது.
அதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 75.30 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4191.10 ஆக சரிந்தது.
மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 718 பங்குகளின் விலை அதிகரித்தது, 1925 பங்குகளின் விலை குறைந்தது, 64 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 102.49, சுமால் கேப் 129.88, பி.எஸ்.இ. 100-127.27, பி.எஸ்.இ. 200-30.31, பி.எஸ்.இ. 500- 95.56 புள்ளி குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 97.60 , பாங்க் நிஃப்டி 103.90, சி.என்.எக்ஸ்.100- 69.75, சி.என்.எக்ஸ். டிப்டி 59.30, சி.என்.எக்ஸ். 500- 56.55, சி.என்.எக்ஸ். மிட் கேப் 93.55, மிட் கேப் 50- 50.60, சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவு 82.60 புள்ளி குறைந்தது.
இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,262.79 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,928.35 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.764.63 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.672.88 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 57,309.39 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இந்த மாதத்தில் மட்டும் ரூ.10,814.54 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 174.03, வங்கி பிரிவு 130.92, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 157.41, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 25.67, மின் உற்பத்தி பிரிவு 39.89, உலோக உற்பத்தி பிரிவு 487.51, ரியல் எஸ்டேட் பிரிவு 89.48 வாகன உற்பத்தி பிரிவு 80.64, தகவல் தொழில் நுட்ப பிரிவு 91.91 புள்ளி குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 9 பங்கு விலை அதிகரித்தது, 41 பங்குகளின் விலை குறைந்தது.
நிஃப்டி ஜூனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 13 பங்குகளின் விலை அதிகரித்தது, 37 பங்குகளின் விலை குறைந்தது.
சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 3 பங்குகளின் விலை அதிகரித்தது, 17 பங்குகளின் விலை குறைந்தது.
பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 1 பங்கு விலை குறைந்தது, 11 பங்கு விலை அதிகரித்தது.
நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 8 பங்குகளின் விலை அதிகரித்தது, 42 பங்குகளின் விலை குறைந்தது.