சென்செக்ஸ் 334 புள்ளிக‌ள் சரிவு!

வியாழன், 19 ஜூன் 2008 (17:20 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சரிந்த குறியீட்டு எண்கள், மாலை வரை அதிகரிக்கவில்லை.

ஆசிய பங்குச் சந்தைகளிலும் பாதகமான நிலையே இருந்தது. அத்துடன் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தால், காங்கிரஸ் கட்சிக்கும் இடதுசாரி கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியும் பங்குச் சந்தையில் எதிரொலித்தது. இன்று பெரும்பாலான பங்குகள் விற்பனை செய்ததால் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் பாதிக்கப்பட்டன.

குறிப்பாக ரியல்எஸ்டேட், வங்கி, நுகர்வோர் பொருட்களின் பங்குகளின் விலை அதிக அளவு குறைந்தது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 334.32 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 15,087.99 ஆக குறைந்தது.

இன்று காலை ஆசிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிந்தன. மாலையில் ஹாங்காங்கின் ஹாங்செங் 528.19, ஜப்பானின் நிக்கி 322.65, சீனாவின் சாங்காய் காம்போசிட் 192.24, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 33.41, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 47.43 புள்ளி குறைந்தது.

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய பிறகு தொடங்கும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் பெரும்பாலானவற்றில் குறியீட்டு எண் குறைந்தது. மாலை 5.06 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 0.90 புள்ளி அதிகரித்து இருந்தது.

மாலை வர்த்தகம் முடிந்த போது தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 66.65 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4504.25 ஆக குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 842 பங்குகளின் விலை அதிகரித்தது. 1804 பங்குகளின் விலை குறைந்தது. 71 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 129.62 சுமால் கேப் 114.87 பி.எஸ்.இ. 100-166.32 பி.எஸ்.இ. 200-39.12 பி.எஸ்.இ. 500- 123.34 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 193.03, சி.என்.எக்ஸ். ஐ.டி 27.20 ங்க் நிஃப்டி 243.30 சி.என்.எக்ஸ்.100- 80 சி.என்.எக்ஸ். டிப்டி 83.40 சி.என்.எக்ஸ். 500- 67.75 சி.என்.எக்ஸ். மிட் கேப் 117.60 மிட் கேப் 50- 54.43 புள்ளி குறைந்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,471.36 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,906.36 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.791.87 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.598.23 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 55,046.18 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. இந்த மாதத்தில் மட்டும் ரூ.8,551.32 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 157.47 வங்கி பிரிவு 293.26 நுகர்வோர் பொருட்கள் பிரிவு 451.64 பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 147.50 மின் உற்பத்தி பிரிவு 70.09 உலோக உற்பத்தி பிரிவு 119.62 ரியல் எஸ்டேட் பிரிவு 251.18 தகவல் தொழில் நுட்ப பிரிவு 28.04 புள்ளி வாகன உற்பத்தி பிரிவு 35.41 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 8 பங்கு விலை அதிகரித்தது. 40 பங்குகளின் விலை குறைந்தது. 2 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை.

நிஃப்டி ஜூனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 4 பங்குகளின் விலை அதிகரித்தது. 46 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 4 பங்குகளின் விலை அதிகரித்தது. 15 பங்குகளின் விலை குறைந்தது. 1 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை.

பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 1 பங்கு விலை அதிகரித்தது. 11 பங்குகளின் விலை குறைந்தது.

நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 7 பங்குகளின் விலை அதிகரித்தது. 43பங்குகளின் விலை குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்