தங்கம் வெள்ளி விலை உயர்வு!

வியாழன், 19 ஜூன் 2008 (14:16 IST)
மும்பையில் இன்று காலை தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.115ம், பார் வெள்ளி விலை 1 கிலோவுக்கு ரூ.255ம் அதிகரித்தது.

அந்நிய நாட்டு சந்தைகளில் விலை உயர்வதால், இங்கு ஆபரண உற்பத்தியாளர்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டியாதால் விலை அதிகரித்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அந்நிய நாடு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது.

மற்ற நாட்டு செலவாணிகளுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தது. இதனால் நியூயார்க் சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது.

நியூயார்க் சந்தையில் நேற்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 893.40 / 894.40 டாலராக குறைந்தது. முந்தைய நாள் விலை 890.75 / 891.95 டாலர்.

பார் வெள்ளியின் 1 அவுன்ஸ் 17.35 / 17.42 டாலராக அதிகரித்தது. முந்தைய நாள் விலை 17.33 / 17.43 டாலர்.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,460
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,400
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,485

வெப்துனியாவைப் படிக்கவும்