மும்பையில் இன்று காலை தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.15ம், பார் வெள்ளி விலை 1 கிலோவுக்கு ரூ.45ம் குறைந்தது.
மும்பையில் விலை குறைந்தாலும், அந்நிய நாடுகளின் சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தது. ஆனால் வெள்ளி விலை அதிகரித்தது.
நியுயார்க் சந்தையில் நேற்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 882.85 / 883.85 டாலராக குறைந்தது. முந்தைய நாள் விலை 884.20 / 885.40 டாலர்.
பார் வெள்ளியின் 1 அவுன்ஸ் 17.09 / 17.16 டாலராக அதிகரித்தது. முந்தைய நாள் விலை 17.05 / 17.13 டாலர்.
சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால், கச்சா எண்ணெய் விலையும், தங்கத்தின் விலையும் குறைந்ததாக சிங்கப்பூர் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,315 22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,255 பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,315.