மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று வெள்ளி விலை சிறிது குறைந்தது. ஆனால் தங்கத்தின் விலை அதிகரித்தது.
காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.35 குறைந்தது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.45 அதிகரித்தது.
சிங்கப்பூர் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 871.70/872.70 டாலராக அதிகரித்தது. நேற்று நியுயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 867.55/869.55 டாலராக இருந்தது.
சிங்கப்பூரில் விலை உயர்ந்ததால், மும்பையிலும் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். அதே போல் 1 அவுன்ஸ் பார் வெள்ளியின் விலையும் 16.44/16.54 டாலரில் இருந்து 16.54/16.60 டாலராக அதிகரித்தது.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,175 22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,115 பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,870