மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே சரிந்த குறியீட்டு எண்கள் தொடர்ந்து குறைந்து வந்தன. மதியம் மூன்று மணிக்கு பிறகு சிறிது முன்னேற்றம் காணப்பட்டது.
நேற்றைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில், பங்குச் சந்தை இன்று ஆறுதல் அளிக்கும் விதத்தில் இருந்தது.
நேற்று காலையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் 15 ஆயிரத்திற்கும் குறைந்தது. ஆனால் சிறிது நேரத்திற்குள்ளேயே முன்னேறியது.
ஆனால் இன்று காலையில் தொடங்கும் போதே 15,000க்கும் குறைந்த சென்செக்ஸ் இறுதி வரை அதிகரிக்கவில்லை.
இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 176.85 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 14,889.25 ஆக குறைந்தது.
இன்று ஆசிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. ஜப்பானின் நிக்கி 160.21, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 34.58, ஹாங்காங்கின் ஹாங்செங் 1,026.66, சீனாவின் சாங்காய் காம்போசிட் 257.34 புள்ளிகள் குறைந்தன.
இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய பிறகு தொடங்கும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. மாலை 5 மணி நிலவரப்படி பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ.100- 22 புள்ளிகள் குறைந்தது.
மாலை வர்த்தகம் முடிந்த போது தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 51.15 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4,449.80 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 964 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,667 பங்குகளின் விலை குறைந்தது, 68 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 66.50, சுமால் கேப் 75.38, பி.எஸ்.இ. 100-85.01, பி.எஸ்.இ. 200-20.41, பி.எஸ்.இ. 500- 63.83 புள்ளி குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 131.80, சி.என்.எக்ஸ். ஐ.டி. 109.45, பாங்க் நிஃப்டி 134.85, சி.என்.எக்ஸ்.100- 52.55, சி.என்.எக்ஸ். டிப்டி 58.45, சி.என்.எக்ஸ். 500- 41.20 சி.என்.எக்ஸ். மிட் கேப் 50.90, மிட் கேப் 50- 39.65 புள்ளி குறைந்தது.
இரண்டு பங்குச் சந்தைகளிலும் நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,546.85 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,891.53 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,842.10 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.811.84 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.51,750.56 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 14.67 புள்ளி அதிகரித்தது.
மின் உற்பத்தி பிரிவு 12.32, பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 79.54, வங்கி பிரிவு 170.99, தகவல் தொழில் நுட்ப பிரிவு 121.02, உலோக உற்பத்தி பிரிவு 123.69, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 18.06, ரியல் எஸ்டேட் 121.61, வாகன உற்பத்தி பிரிவு 4.06 புள்ளி குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 18 பங்கு விலை அதிகரித்தது, 32 பங்குகளின் விலை குறைந்தது.
நிஃப்டி ஜீனியர் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 15 பங்குகளின் விலை அதிகரித்தது, 35 பங்குகளின் விலை குறைந்தது.
சி.என்.எக்ஸ். ஐ.டி பிரிவில் உள்ள 20 பங்குகளில் 4 பங்குகளின் விலை அதிகரித்தது, 16 பங்குகளின் விலை குறைந்தது.
பாங்க் நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 2 பங்குகளின் விலை அதிகரித்தது 10 பங்குகளின் விலை குறைந்தது.
நிஃப்டி மிட் கேப் பிரிவில் உள்ள 50 பங்குகளில் 11 பங்குகளின் விலை அதிகரித்தது, 39 பங்குகளின் விலை குறைந்தது.