மும்பையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 24 ஆயிரத்தை தாண்டியது.
இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.435ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.120 அதிகரித்தது.
ஆசிய நாட்டு சந்தைகளில் வந்த தகவல்களினாலும், மொத்த வர்த்தகர்கள் அதிக அளவு விற்பனை செய்யாத காரணத்தினால் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்தது
இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 880.60/882.20 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 878.20/880.60 டாலர்). இதே போல் பார் வெள்ளியின் விலை 1 அவுனஸ் 17,17/17.20 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 16.77/16.79 டாலர்).
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,280 22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,220 பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,235