சென்செக்ஸ் 73, நிஃப்டி 15 புள்ளிகள் சரிவு!

செவ்வாய், 27 மே 2008 (18:55 IST)
கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து, இன்று காலை வர்த்தகத்தில் 100 முதல் 150 புள்ளிகள் வரை உயர்ந்த மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் பிற்பகல் வர்த்தகத்தில் மீண்டும் சரிந்து இறுதியில் 73 புள்ளிகள் குறைந்து 16,275.59 புள்ளிகளாக முடிந்தது.

தேச பங்குச் சந்தைக் குறியீட்டு எண் (நிஃப்டி) 15.25 புள்ளிகள் குறைந்து 4,859.80 புள்ளிகளாக குறைந்தது.

பணவீக்கத்தைக் குறைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னரும், கச்சா விலையேற்றத்தின் காரணமாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படும் என்பதால் பண‌வீ‌க்க‌ம் மேலு‌ம் அதிகரிக்கும் சூழல் நிலவுவதால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் முனைப்புக் காட்டியதன் காரணமாக காலை வர்த்தகத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் பிறகு மாறியதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்