பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்!

செவ்வாய், 27 மே 2008 (13:39 IST)
கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்திக் கொண்டிருந்த மும்பை, தேச பங்குச் சந்தைகளில் இன்று காலை முதல் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது.

நேற்றைய ஒரு நாள் வர்த்தகத்தில் 301 புள்ளிகளை இழந்து 16,348.5 புள்ளிகளாக குறைந்த மும்பை பங்குச் சந்தைக் குறியீடு (சென்செக்ஸ்), இன்று காலை 106.25 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகத்தைத் துவக்கியது.

அடுத்த ஒரு மணி நேர வர்த்தகத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டு 157.85 புள்ளிகள் உயர்ந்து 16,506.35 புள்ளிகளைத் தொட்டது. ஆனால் பங்கு விற்பனை மீண்டும் உயரத் துவங்க 100 புள்ளிகளுக்கும் அதிகமாக குறைந்தது.

ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றமே இந்தியப் பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலையை ஏற்படுத்தியதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிற்பகல் 1.15 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 103 புள்ளிகள் அதிகரித்து 16,452 புள்ளிகளாகவும், தேச பங்குச் சந்தைக் குறியீடு (நிஃப்டி) 48 புள்ளிகள் அதிகரித்து 4,923 புள்ளிகளாகவும் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்