மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 301 புள்ளிகள் குறைந்தது!
திங்கள், 26 மே 2008 (20:32 IST)
இன்று காலை வர்த்தகம் துவங்கியது முதல் குறைந்த, பிறகு சற்றே அதிகரித்த மும்பை பங்குச் சந்தைக் குறியீடு, பெரும் விலை கொண்ட பங்குகளின் விற்பனையால் வர்த்தகத்தின் இறுதியில் 301 புள்ளிகள் சரிந்தது.
இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் மும்பை பங்குச் சந்தைக் குறியீடு (சென்செக்ஸ்) 16,348.50 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தைக் குறியீடு (நிஃப்டி) 71.50 புள்ளிகள் குறைந்து 4,875.24 புள்ளிகளாகவும் குறைந்தது.
மதியத்திற்கு பின் நடந்த வர்த்தகத்தில் அதிக விலைகொண்ட பெல், ஹெச்.டி.எஃப்.சி. மற்றும் உலோக நிறுவனங்களின் பங்குகள் அதிகமாக விற்கப்பட்டதால் அதுவரை 181 புள்ளிகள் சரிந்திருந்த சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிந்தது.
உலோக பங்குகளுக்கான குறியீடு மட்டும் 452.59 புள்ளிகள் குறைந்தது. இதற்கு அடுத்தப்படியாக மூலதனப் பொருள் நிறுவனங்களின் பங்குகள் குறியீடு 358.74 புள்ளிகள் குறைந்தது. வங்கிகள் பங்குக் குறியீடு 292.91 புள்ளிகள் குறைந்தது.
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று ஏற்பட்ட வீழ்ச்சி கடந்த 6 வாரங்களில் மிக அதிகமானதாகும்.