உயர்ந்து கொண்டே இருக்கும் காய்கறி விலைகள்!
சனி, 24 மே 2008 (09:36 IST)
பீன்ஸ், கேரட், கத்தரிக்காய், பீட்ரூட், குடை மிளகாய், பட்டாணி, முருங்கக்காய், சாம்பார் வெங்காயம் போன்றவை உயர்ந்து கொண்டே இருக்கிறதே தவிர குறைவில்லை. கோடை முடியும் வரை காய்கறி விலை உயர்வு அப்படியே இருக்கும் என்று வியாபாரிகள் சங்கத் தலைவர் செளந்தரராஜன் கூறினார்.
ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காய்கறி விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது. இதனால் சென்னை கோயம்பேட்டுக்கு வரும் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. விளைச்சல் நன்றாக இருக்கும் நேரத்தில் ஒரு நாளைக்கு 500 முதல் 700 லாரிகள் வந்தது. தற்போது 200 லாரிகள் வருவதே மிகவும் அரிதாக உள்ளது என்று செளந்தரராஜன் தெரிவித்தார்.
தற்போது காய்கறி விலையை பொறுத்த வரை ஒரு நிலையான நிலையில் இருப்பதில்லை. முன்பு வாரத்திற்கு ஒருமுறை விலை உயர்வு இருந்தது. தற்போது ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை விலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விளைச்சல் குறைவானதே என்று செளந்திரராஜன் கூறினார்.
நேற்று ஒரு கிலோ மிளகாய் ரூ.24க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ் நேற்று வரை விலை தாறுமாறாக உயர்ந்திருந்தது. ஒரு கிலோ ரூ.40க்கு விற்ற பீன்ஸ் இன்று கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல் கேரட், கத்தரிக்காய், பீட்ரூட், குடை மிளகாய், பட்டாணி, முருங்கக்காய், சாம்பார் வெங்காயம் போன்றவை உயர்ந்து கொண்டே இருக்கிறதே தவிர குறைவில்லை. கோடை முடியும் வரை காய்கறி விலை உயர்வு அப்படியே இருக்கும் என்று செளந்தரராஜன் கூறினார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று விற்கப்படும் காய்கறி விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
தேங்காய் ரூ.07
கோஸ் ரூ.04
கேரட் ரூ.20
பீட்ரூட் ரூ.10
சவ்சவ் ரூ.10
நூக்கோல் ரூ.10
முள்ளங்கி ரூ.10
வெள்ளரிக்காய் ரூ.12
பீன்ஸ் ரூ.25
கத்திரிக்காய் ரூ.10
அவரைக்காய் ரூ.20
புடலங்காய் ரூ.10
வெண்டைக்காய் ரூ.12
மிளகாய் ரூ.25
குடை மிளகாய் ரூ.50
முருங்கக்காய் ரூ.20
இஞ்சி ரூ.50
சேனைக் கிழங்கு ரூ.12
சோம்பு ரூ.11
உருளைக்கிழங்கு ரூ.09
கோவக்காய் ரூ.10
பட்டாணி ரூ.50
சுரக்காய் ரூ.04
நாட்டு தக்காளி ரூ.08
பெங்களூர் தக்காளி ரூ.10
பூசணி ரூ.06
நாசிக் வெங்காயம் ரூ.07
சாம்பார் வெங்காயம் ரூ.20
மாங்காய் ரூ.12
பீர்க்கன்காய் ரூ.08
பாகற்காய் ரூ.15
காலிபிளவர் (ஒன்று) ரூ.10
பரங்கிகாய் ரூ.06
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஸ்ட்ராபெர்ரி ரூ.180
இந்தியன் ஆப்பிள் ரூ.84
வாஷிங்டன் ஆப்பிள் ரூ.90
நாக்பூர் ஆரஞ்சு ரூ.62
நாவல் ஆரஞ்சு ரூ.75
சாத்துக்குடி ரூ.28
கொய்யா ரூ.18
கருப்பு திராட்சை ரூ.28
பச்சை திராட்சை ரூ.60
கணேஷ் மாதுளை ரூ.32
காபூல் மாதுளை ரூ.41
செவ்வாழைப்பழம் ரூ.24
கற்பூரவள்ளி ரூ.14
ரஸ்தாளி ரூ.17
பச்சை வாழைப்பழம் ரூ.12
பப்பாளி ரூ.08
சப்போட்டா ரூ.20
கிரினி பழம் ரூ.10
தர்பூசணி ரூ.6.50
நேந்திரம் பழம் ரூ.22
பகனப்பள்ளி மாம்பலம் ரூ.25
செந்துரா மாம்பலம் ரூ.16
அல்போன்சா மாம்பலம் ரூ.40
அத்திப்பழம் ரூ.36
பூ வகைகள் (ஒரு கிலோ)
மல்லி ரூ.80
முல்லை ரூ.100
கனகாமரம் ரூ.200
சம்பங்கி ரூ.100
100 ரோஸ் ரூ.40
கோழி கொண்டை ரூ.40
வாடா மல்லி ரூ.40
செண்டு பூ ரூ.40
அரளி பூ ரூ.40