சென்செக்ஸ் 124 புள்ளிக‌ள் உயர்வு!

திங்கள், 12 மே 2008 (17:47 IST)
மும்பபங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தையில் காலையில் இருந்து சரிந்து வந்த குறியீட்டு எண்கள், மதியம் 3 மணிக்கு பிறகு அதிகரிக்க‌த் துவங்கின.

சென்ற வாரம் முழுவதும் சரிவை சந்தித்து வந்த பங்குச் சந்தையில், இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போதே சென்செக்ஸ், நிஃப்டி குறைந்தது.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண்கள் குறைந்தது.

ஆனால் இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய பிறகு, தொடங்கும் ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையில் முன்னேற்றம் காணப்பட்டதால், காலையில் இருந்து சரிந்து வந்த குறியீட்டு எண்கள் மதியத்திற்கு பிறகு அதிகரிக்க துவங்கின.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 123.83 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 16,860.90 ஆக முடிந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 30.05 புள்ளி உயர்ந்து, குறியீட்டு எண் 5012.65 ஆக முடிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 920 பங்குகளின் விலை அதிகரித்தது, 1,777 பங்குகளின் விலை குறைந்தது, 50 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 46.75, சுமால் கேப் 102.08 புள்ளிகள் குறைந்தன. ஆனால் பி.எஸ்.இ. 500- 20.52 புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 7.20, சி.என்.எக்ஸ். டிப்டி 14.55, சி.என்.எக்ஸ். மிட் கேப் 44.80 புள்ளி குறைந்தது.

அதே நேரத்தில் சி.என்.எக்ஸ். ஐ.டி 45.60, பாங்க் நிஃப்டி 31.55, சி.என்.எக்ஸ்.100- 24.30, சி.என்.எக்ஸ். 500- 2.20, சி.என்.எக்ஸ். மிட் கேப் 50- 3.95 புள்ளி அதிகரித்தது.

நேற்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,304.20 கோடி மதிப்பள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.3,923.54 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,261.40 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.1,081.24 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து இதுவரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.41,448.88 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.28,530.48 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று தகவல் தொழில் நுட்ப பிரிவு 1.48%, பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 1.02%,வங்கி பிரிவு 0.63%, நுகர்வோர் பொருட்கள் பிரிவு 0.10%, மின் உற்பத்தி பிரிவு 0.62%, உலோக உற்பத்தி பிரிவு 0.23% அதிகரித்தது.

பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவு 0.09%, ரியல் எஸ்டேட் 1.95%, வாகன உற்பத்தி பிரிவு 0.75%, குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்